எண்ணெய் பசையுள்ள சரும பராமரிப்பு …
தேன், ஆரஞ்சுப் பழச்சாறு, ரோஸ் வாட்டர், முல்தாணிமட்டித்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பேக் போட்டு நன்கு காய்ந்த பின்பு கழுவி வர சருமம் பொலிவு பெறும்.
வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 தேக்கரண்டி இம்மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
எண்ணெய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இறுக்கமாகும்.
நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவேண்டும்
0
Leave a Reply